கோவை: வேளாண் மசோதா உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சட்ட மசோதாக்களை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று வால்பாறையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறை, காந்தி சிலை வளாகத்தில், தாலுக்கா செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என்று எல் கோஷங்களை எழுப்பினார்.
மேலும், புதிய கல்வி கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கும் நீட் போன்ற தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று கண்டனங்களை எழுப்பினர்.

இது போல, மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு சட்ட மசோதாக்களை கண்டித்தும், மத்திய அரசின் புதிய சட்ட வரைவுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தாலுகா செயலாளர் மோகன் மாணிக்கம், பெரியசாமி, வழக்கறிஞர் விசுவநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.