தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டம் மூலம் 4,741 பேருக்கு ரூ.3.77 கோடி கொரோனா சிறப்பு நிதி, அதிகாரிகள் தகவல்

கோவை: தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிதியாக 4,741 பேருக்கு ரூ.3.77 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிதியாக 4,741 பேருக்கு ரூ.3.77 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் தொழில்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு உருவாக்குதல், நிதி சேவைகள் வழங்குதல், வருமானத்தை இரட்டிப்பாக்கி, தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருகிறது.

கோவை மாவட்டத்தில் பெ.நா.பாளையம், அன்னூர், எஸ்.எஸ்.குளம், காரமடை ஆகிய 4 வட்டாரங்களிலும் 54 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கொரோனா சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டது. இதில், கோவை மாவட்டத்துக்கு ரூ.5.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இதுவரை தனிநபர் தொழில் கடன் பிரிவில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2.16 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தொழில் தொடங்க ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.67.50 லட்சமும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.36 லட்சம், குழு நிறுவனங்களுக்கு ரூ 16.50 லட்சம், உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் புலம் பெயர்ந்து சென்று மீண்டும் ஊருக்கு திருப்பிய இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் வீதம் 21 பேருக்கு 21 லட்சம் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 741 பேருக்கு ரூ. 3 கோடியே 77 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊரகப் புத்தாக்க திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் 5 ஆயிரத்து 47 பேருக்கு கொரோனா சிறப்பு நிதியாக ரூ.5.16 கோடி நிதி அறிவிக்கப்பட்டது. இதில், 4 ஆயிரத்து 4 ஆயிரத்து 741 பேருக்கு ரூ.3.77 கோடி நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் நிதி அளிக்கப்படும்," என்றார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...