அன்னூர் பேருந்து நிலையத்தில் கூட்டத்தை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கைது!

கோவை: அன்னூர் பேருந்து நிலையத்தில் கூட்டத்தை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை: அன்னூர் பேருந்து நிலையத்தில் கூட்டத்தை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் முதல்கட்டமாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி சிறுமுகையை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் பெருந்துறை செல்வதற்காக அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும் போது, அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்திருந்த 15 ஆயிரம் மதிப்புடைய செல்போன் திருடுபோனதாக அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சிவா(எ) முருகேஷ் செல்போனை பிக்பாக்கெட் அடித்து இருந்ததும் செல்போனை திருடிய பின் பேருந்தில் ஏறாமல் வெளியே வந்து அவரது நண்பர் ஒருவரின் வாகனத்தில் ஏறி செல்வது போன்ற காட்சிகள் சிசிடிவி மேகராவில் பதிவாகி இருந்தன.

இதனை தொடர்ந்து, அவரை அன்னூர் போலீசார் கைது செய்தனர். அன்னூரில் பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பொதுமக்கள் சி.சி.டி.வி கேமராக்களை அவர்களது இல்லம், அலுவலகங்கள் போன்ற இடங்களில் பொருத்தினால் குற்றச்சம்பவங்களை தடுக்க வசதியாக இருக்கும் என போலீசார் அறிவுறுத்தினர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...