திருப்பூர்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 36 பேருக்கும் விடுதலை வழங்கி உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிபதியின் உருவபொம்மையை எரித்து, திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 48 பேரில் ஏற்கனவே 12 பேர் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த நிலையில் மீதமிருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 36 பேருக்கு நேற்றைய தினம் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை வழங்கி தீர்ப்பளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், உடனடியாக மத்திய அரசு உரிய ஆதாரங்களை திரட்டி மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் சி டி சி கார்னரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த யாதவின் உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.