கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 24 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. வேந்தர் Dr கு. இராமசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr N. பஞ்சநதம் சிறப்புரை ஆற்றினார்.


Coimbatore: கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் பிரிவு மாணவர்களுக்கான 18-வது பட்டமளிப்பு விழா நேற்று (11.07.2026) நடைபெற்றது. இவ்விழாவில் மொத்தம் 2146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.






கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr கு. இராமசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr இராச. வசந்தகுமார், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் Dr சு. இரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr N. பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழாவில் பேருரை நிகழ்த்தினார். மாணவர்களின் உயர்கல்வியும், ஆராய்ச்சியும், சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




பொதுநல சிந்தனையும், தியாக உணர்வும் உலகில் அன்பையும், அமைதியையும் நிலைக்கச் செய்ய வேண்டும். தனிமனித தேவைகள் குறைந்து, உணவு, கல்வி, மருத்துவம் முதலான அடிப்படை தேவைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதற்கு மாணவர்கள் உறுதியேற்க வேண்டும் என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.




இந்த விழாவில், 18 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 24 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. மொத்தம் 2146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பதிவாளர் Dr பீ.வீ. பிரதீப், தேர்வாணையர் Dr ப. பழனிவேலு மற்றும் Dr வீ. இராகவி உள்ளிட்ட முதன்மையர்களும், துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...