கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் மெளன ஊர்வலம் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கோவை: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் மெளன ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் மெளன ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் பாஜக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



சிவானந்தா காலனி பகுதியில் துவங்கிய இந்த ஊர்வலம் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.



மலர்களால், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ராமகோபாலனின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. வி.கே.கே மேனன் சாலையில் வைக்கப்பட்டிருந்த ராமகோபாலனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன், கனகசபாபதி, மூகாம்பிகை மணி, தே.மு.தி.க காட்டன் செந்தில், மதிமுக மோகன் குமார், நாகசத்தி பீடம் பாபு ஜி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன், பிள்ளையார் பீடம் மணிகண்டன் சுவாமிகள் விஷ்வ ஹிந்து பரிஷத் லக்‌ஷ்மி நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதனை தொடர்ந்து, இறுதியாக கூட்டு பாடல்கள் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்ற இந்த மவுன ஊர்வலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...