கோவையில் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1500 அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைப்பு!

கோவை: கோவையில் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1500 அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1500 அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் ஊட்ட சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுதொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் மீனாட்சி கூறுகையில்,‘‘ கோவை மாவட்டத்தில் 1,690 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் இதுவரை, 1,500 அங்கன்வாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன. முருங்கை, பப்பாளி, கீரை வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர பஞ்சாயத்து இடங்களில் வேளாண் துறையுடன் இணைந்து, காய்கறி தோட்டம் அமைக்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் இடப்பரப்பளவிற்கு ஏற்ப இந்த காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து தொடர்பான விழிப்புணர்வு கிடைக்கிறது. மேலும், சுமார் 1500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குழந்தைகளின் ஊட்ட சத்து தொடர்பாக ஆய்வும் மேற்கொள்கின்றனர்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...