திருப்பூரில் மத்திய அரசுக்கு எதிராக 47 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக 47 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக 47 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில், திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



அதனடிப்படையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், விவசாய சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம் , காங்கேயம் உள்ளிட்ட 47 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...