தனியார்மயமாக்கல் பட்டியலில் கோவை விமான நிலையம்?

கோவை: கோவை விமான நிலையம் தனியார்மயமாக்கல் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை விமான நிலையம் தனியார்மயமாக்கல் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கியுள்ளது. மேலும் பல விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என கூறியுள்ளது. இரண்டாம் கட்ட பட்டியலில் தமிழகத்தின் திருச்சி விமான நிலையம் உள்ளது. கோவை விமான நிலையம் மூன்றாவது பட்டியலில் இருந்ததாகவும் ஆனால் சமீபத்தில் இரண்டாம் கட்ட பட்டியலில் கோவை மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 

தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தொழில்துறையினர். விமான நிலைய விரிவாக்கத் திட்டம் செயல்படுத்துவதில் காலதாமதம், ஓடுபாதை விரிவாக்கம் செய்வது, பாயிண்ட் ஆஃப் கால் பைலேட்ரல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத காரணத்தால் பல்வேறு உலக நாடுகளுக்கு விமானங்கள் இயக்க முடியாது என்பது உள்ளிட்ட தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவதுடன் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் கீழ் வரக்கூடிய 7 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கும் எனக் கூறியுள்ளனர். 

கோவை சர்வதேச விமான நிலைய தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டாம் கட்ட பட்டியலில் கோவை விமான நிலையம் சேர்க்கப்படவில்லை" என்றார். இரண்டாம் கட்டமோ, மூன்றாம் கட்டமோ, கோவை விமான நிலையம் தனியார்மயமாக்கல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது ஏர்போர்ட் வட்டாரங்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் சமீபகாலமாக அதிக அளவு பகிரப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...