பொள்ளாச்சியில், இருசக்கர வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கும்பல் கைது; ரூ.9.64 லட்சம் பறிமுதல்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், இருசக்கர வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து,ரூ.9.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம்பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் .இவர் கடந்த 15ம் தேதி வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தின்முன்பக்க சீட் கவரில் வைத்து விட்டு, பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள ஒரு கடையில் புத்தகம் வாங்குவதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தில் வைத்திருந்த, 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து, ஜெய்கணேஷ் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், உடுமலை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, காட்டு ராஜா, விஜய், ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரித்தபோது, இவர்கள் பொள்ளச்சி, நாமக்கல் உள்ளிட்டபகுதிகளில் பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

பின்னர், அவர்களிடம் இருந்த 9 லட்சத்து 84 ஆயிரம்ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 கொள்ளையர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவிநாசி சிறையில் அடைத்தனர்.
இவர்கள், வங்கிகளில் பணத்தை எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு, பின்தொடர்ந்து சென்று, இரு சக்கர வாகனங்களில் பணத்தை வைத்துவிட்டு சென்றால்கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பணத்தை கொள்ளையடித்து செல்வதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த நூதன கொள்ளையர்களை கைது செய்த பொள்ளாச்சி போலீசாருக்கு பாராட்டுகள் குவிகிறது.