கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. இளங்கலை வேதியல், இயற்பியல், கணிதவியல், விலங்கியல் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம். போன்ற 24 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இந்த மாதம் துவக்கம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த இடங்கள் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இதனிடையே தற்போது இறுதிக்கட்ட கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில், "கோவை அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 24 பாடப்பிரிவுகளில் 1,433 இடங்கள் உள்ளன. இதில் தற்போது வரை 1, 330 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட பாடப்பிரிவுகள் 90 சதவீதத்துக்கு மேல் நிரப்பப்பட்டு விட்டன. அறிவியல் பாடப்பிரிவில் மட்டுமே கொஞ்சம் காலி இடங்கள் உள்ளன.
இந்த காலியிடங்களுக்கு இறுதி கலந்தாய்வு வருகிற 28ம் தேதி நடக்கும். இதில் ஏற்கனவே விண்ணப்பித்து இடங்கள் கிடைக்காத மாணவ-மாணவிகள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழுடன் கலந்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள காலியிடங்களுக்கு 29-ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். இதில் விண்ணப்பிக்காத மாணவ- மாணவிகளும் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். இந்த காலியிடங்கள் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நடத்தப்படுகிறது," என்றார்.