பள்ளிகள் திறப்பை முன்னிட்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கோவையில் கூடுதலாக 300 அரசு பஸ்கள் இயக்க திட்டம்

கோவை: தமிழத்தில் வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, கோவையில் கூடுதலாக 300 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கோவை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: தமிழத்தில் வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, கோவையில் கூடுதலாக 300 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கோவை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு வரும் 1ம் தேதி முதல் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும், என்று அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று வர வசதியாக, கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வரும் 1ம் தேதி முதல் கூடுதலாக 300 அரசு டவுன் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் தற்போது 287 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடும். எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூடுதலாக 300 டிவுன் பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்."

கொரோனா தொற்று காரணமாக, வழக்கமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும், நடப்பாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. எனவே, அவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ்சை கண்டக்டரிடம் காண்பித்தால் போதுமானது. மேலும் மாணவர்கள் சீருடையில் இருந்தாலே அவர்களிடம் டிக்கெட் கட்டணம் பெறக்கூடாது என்று கண்டக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...