செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை 2 மணி நேரத்தில் கைது செய்த கோவை போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு

கோவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை இரண்டு மணி நேரத்தில் கைது செய்து, நகையை மீட்ட போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை இரண்டு மணி நேரத்தில் கைது செய்து, நகையை மீட்ட போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சர்மிளா (20). இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் குறிச்சி பகுதி உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் கண் இமைக்கும் நேரத்தில் சர்மிளா கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.

இது குறித்து, போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது குறிச்சி பகுதியை அதியமான் (எ) நாசர் (25) என்பதும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, அவரை குறிச்சி மின்மயானம் உள்ள பகுதியில் வைத்து கைது செய்ததாக போலீசாார் தெரிவித்தனர். மேலும், அவரிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்டனர்.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை இரண்டு மணி நேரத்தில் பிடித்து நடவடிக்கைகள் எடுத்த காவலர்களை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் வெகுவாக பாராட்டினார். இந்நிலையில், பொதுமக்கள் தான் செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...