மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பொள்ளாச்சி சார் ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி, வால்பாறை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வட்டாட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி, வால்பாறை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வட்டாட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சார் ஆட்சியர் வைத்தியநாதன், "பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் இருந்து, கொரோனா பரிசோதனை குறித்த அறிக்கைகள் வருவாய்த் துறைக்கு முறையாக தெரிவிப்பதில்லை, இதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கைகளை பெற வேண்டும். மேலும் நகர் மற்றும் கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் மருந்துக்கடைகளில், மருத்துவச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க கூடாது," என்றார்.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் பொழுது விதிமுறைகளை கடைப்பிடிக்காத, கடை உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் கடைக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்படும் என்றும எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது சார் ஆட்சியர் கூறுகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும், கடைகள், உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை, இவ்வாறு நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொள்ளாச்சியில் இரவு 8 மணிக்கு மேல் மருந்துக்கடைகள், தவிர அனைத்து கடைகளும் மூட வேண்டும், என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...