கோவை: ஆனைமலை காடுகளில் சிங்கவால் குரங்கு குறித்த கணக்கெடுப்பு பணியானது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என அறிக்கை வெளியாகி இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள களக்காடு, முண்டன்துறை, வால்பாறை போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படுவை சிங்க வால் குரங்கினங்கள். இதன் வெளிப்புற தோலில் உள்ள கருமை நிற ரோமங்கள் மின்னும் தன்மை கொண்டவை.
சிங்கத்தின் வால் போன்ற அமைப்பு கொண்டதால் ஆங்கிலத்தில் lion tailed macaque என்றும் தமிழில் சோலை மந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அழிந்து வரும் வன உயிரின பட்டியலில் உள்ளதால் இவற்றை பாதுகாக்கும் திட்டங்களும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
வெப்ப மண்டல மழைக்காடுகளில் மட்டும் வாழும் இது பகல் பொழுதில் சுறுசுறுப்பாக காணப்படும். மிக கூச்ச சுபாவம் கொண்ட இவை மனிதர்களிடம் இருந்து விலகி குழுக்களாக வாழும் பழக்கம் கொண்டவை ஆகும். மரம் ஏறுவதில் திறமை வாய்ந்த சோலை மந்திகள் பெரும்பாலான நேரத்தில் மரத்தின் உயர கிளைகளில் இருக்கும். 20 முதல் 30 ஆண்டுகளாக உயிர் வாழக்கூடியவையாகும்.
இது குறித்த வாழ்விடங்களின் தகவல்களை திரட்ட பொள்ளாச்சி வனபரப்பில் வால்பாறை, மானாம்பள்ளி, உலந்தி, பொள்ளாச்சி என வரையறை பகுதிகளில் ஆய்வு செய்ய இருக்கின்றனர். பருவ மழைக்காலம் என்பதால் மழை நின்ற பின் பொள்ளாச்சி வனச்சரகத்தை தவிர மீதம் உள்ள 15 பீட்டிகளில் உள்ள காடுகளில் சோலைமந்தியின் வாழ்விடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பில் nature conservation foundations சார்ந்த ஆய்வாளர்கள் முன்னதாகவே வால்பாறையில் உள்ள புதுதோட்டப்பகுதியில் இது குறித்த ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார். இனி ஆனைமலை காடுகளில் உள்ள மற்ற பகுதிகளில் சோலைமந்தி பற்றிய கணக்கெடுப்பிலும் பங்கு கொள்ள இருக்கிறார்கள்.
சோலைமந்திகள் அதிகமாக காணப்படும் இடங்களை கண்டுபிடித்து நேரிடையாக பதிவு செய்ய இருக்கிறார்கள். சில வருடங்களாக மனிதர்கள் காடுகளை காப்பாற்ற முயற்சி செய்யாமல், வனவிலங்குகளுக்கும் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். மனிதனால் தொந்தரவு கொடுக்கும் வகையில், குரங்குகள் தான் முதல் இடத்தினை வகிக்கிறது. அதனை தீண்டுவது, அச்சுறுத்துவது, பயமுறுத்துவது என்ற செயல்கள் எல்லாம் செய்கின்றனர்.
இது மட்டும் இல்லாமல் அவற்றின் வாழ்விடங்களை குறைத்தும் அழித்தும் வருகிறோம். வனத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட அறிக்கையில், ஆனைமலை காடுகளில் 20,000க்கும் மேற்பட்ட சோலைமந்திகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய இடங்களாக வால்பாறை, டாப்சிலிப், ஆனைமலை, பொள்ளாச்சி செல்வோர் இக்குரங்குகளை பார்த்து அவற்றை தொந்தரவு செய்வது, வீடியோக்கள் எடுப்பது, போட்டோக்கள் எடுப்பது, துன்புறுத்துவது என்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், அரிய வகை உயிரினமான சோலை மந்தியின் எண்ணிக்கை குறித்து அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது. வனத்துறையின் தலைமையில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 நாட்கள் நடைபெற இருக்கிறது.