கோவை: வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.