பாடகர் எஸ்.பி‌.பாலசுப்பிரமணியம் மறைவையொட்டி கோவை ராஜ் மெலோடிஸ் இன்னிசை குழுவினர் சார்பில் பாடல்கள் பாடி இசை அஞ்சலி!

கோவை: பாடகர் மற்றும் நடிகர் எஸ்.பி‌.பாலசுப்பிரமணியம் மறைவையொட்டி கோவை ராஜ் மெலோடிஸ் இன்னிசை குழுவினர் அவர் பாடிய பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.


கோவை: பாடகர் மற்றும் நடிகர் எஸ்.பி‌. பாலசுப்பிரமணியம் மறைவையொட்டி கோவை ராஜ் மெலோடிஸ் இன்னிசை குழுவினர் அவர் பாடிய பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி திரை இசைப் பாடகரும், குணச்சித்திர நடிகருமான எஸ்‌.பி. பாலசுப்பிரமணியம் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலர் நேரில் சென்று செலுத்தினர். நேற்று இரவே திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எஸ்.பி‌. பாலசுப்பிரமணியத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், 24 காவலர்கள், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் பண்ணை நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் இசைக் கலைஞர்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



அந்த வகையில், கோவையில் மறைந்த எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் நிறுவனத்தில், இசை கலைஞர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எஸ்.பி.பி யின் பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.



இதேபோல, கோவையின் பல்வேறு இடங்களில் இசைக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மறைந்த பாடகர் எஸ்.பி‌.பிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...