கோவையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்!

கோவை: குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை திருச்சி சாலையில் உள்ள டிவிஎச் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடிநீர் வசதி, குப்பைகளை அகற்றுவது என அடிப்படை வசதிகள் கோரி குடியிருப்பில் வசித்து வருபவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை வைத்திருந்தனர்.



இதனை தொடர்ந்து, கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில், அங்கு தற்போதுவரை அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி, இன்று அடுக்குமாடி வளாகத்தின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



இது குறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருவதாக அடுக்குமாடி நிர்வாகம் உறுதியளித்தபடி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் இருப்பதாகவும், 850 குடியிருப்புகள் உடைய இந்த வளாகத்தில் குறிப்பாக, குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படவில்லை எனவும், போர் வாட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்றனர்.

அடிப்படை வசதிகள் கேட்டு, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...