கோவை: கோவை விமான நிலையத்தில் கழிவறையில் கிடந்த தோட்டாக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயனளித்து வருகிறது.
இந்நிலையில், துப்புரவு பணியாளர் ஒருவர் இன்று மதியம் ஆண்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றபோது உள்ளே தோட்டாக்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், உடனடியாக இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கும், விமான நிலைய ஆணைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, பீளமேடு போலீசார் ஆண்கள் கழிவறை வளாகத்துக்குள் கிடந்த 6 துப்பாக்கித் தோட்டாக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகல் நேரத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.