6 மாத கால வட்டியை ஒரே தவணையில் வங்கிகள் எடுப்பது கண்டனத்துக்கு உரியது, கோவை தொழில் துறையினர் கண்டனம்

கோவை: இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும், தொழில் நகரமான கோவை பல்வேறு முகங்களுடன் தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டம். இங்கு, குண்டூசி முதல் ராக்கெட்டுக்கு பொறுத்தபடும் உதிரிபாகங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன.

கோவை: இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும், தொழில் நகரமான கோவை பல்வேறு முகங்களுடன் தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டம். இங்கு, குண்டூசி முதல் ராக்கெட்டுக்கு பொறுத்தபடும் உதிரிபாகங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. 

குறிப்பாக, வெட்கிரைண்டர், பம்ப்செட் மோட்டார்களுக்கு தனி சிறப்பு கொண்ட மாவட்டமாக கோவை உள்ளது. ஆட்டோ மொபைல்ஸ் துறையில், மோட்டார் சைக்கிள் முதல் கனரக வாகனங்கள் வரை தேவையான உதிரிபாகங்கள் செய்வதில் கோவை மாவட்டம் சிறப்பு தன்மை உடையது. பிற மாவட்டம், மாநிலம் மக்களுக்கு, கோவை தொழில் துறையினர் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில் பல்வேறு துறையில் சுமார் 1.5 லட்சம் நிறுவனங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 7 மாதங்களுக்கு மேலாக  கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 70 சதவீதத்துக்கு மேல் தொழில்நிறுவனங்கள் உற்பத்தி இழந்து வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல்  தவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள் சங்கம் கோவை மாவட்டம் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்: 

குறுந்தொழில்களுக்கு குறைந்தபட்ச கடன் கூட கிடைக்க பெறாமல், இந்த காலகட்டத்தில் எண்ணற்ற இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். வாடகை கட்டடங்களுக்கு, ஆறு மாதமாக வாடகை கொடுக்க முடியாமலும் தங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், இப்படி ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள்.  

இந்த சூழ்நிலையில் இருந்து தொழில்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கடன் பெற்ற தொழில் நிறுவனங்களுக்கு, மேலும் ஆறு மாத கடன் திருப்பி செலுத்த கால அவகாசம் தர வேண்டும். ஒவ்வொரு குறுந்தொழில் முனைவோர்களுக்கும் அவர்கள் வரவு செலவு செய்து வரும் வங்கிகளின் மூலம், அவர்கள் ஆண்டு வரவு-செலவுத் தன்மைக்கு ஏற்ப 25 சதவீதம் முதலீட்டு கடனாக எவ்வித நிபந்தனையும், இன்றி வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இது குறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறுகையில்: 

தொழில்துறையினர் வங்கிகளில் பெற்றுள்ள மூலதன கடனுக்கான வட்டியை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிரித்து பிரித்து கட்டிக்கொள்ளலாம், என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், வங்கிகள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை வட்டிக்கு எடுத்து கொள்கிறார்கள். கடந்த 6 மாத காலமாக, பல தொழில் நிறுவனங்கள் இயங்காமல் வரவு- செலவு இல்லாமல் வங்கிகளில் பணம் செலுத்த முடியாத நிலையில் இருந்தனர். 

அதன் பின், கடன் பெற்று தொழிலை நடத்தலாம் என வங்கி கணக்குகளில் வரவு- செலவு கணக்குக்காக பணம் செலுத்தினார்கள். ஆனால், வங்கிகள் அதனை வட்டிக்கு எடுத்து கொண்டார்கள். இதனால் மீண்டும் தொழில்நிறுவனங்கள் முடங்கும் அபாயம் உள்ளது. பிடித்த வட்டி தொகையை மீண்டும் கணக்கில் செலுத்த வேண்டும், என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...