பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று பிற்பகலில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: “என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். எஸ்.பி.பி. பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள்.
நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.