கோவை: கோவை மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேட்டில் 589 பேரிடமிருந்து ரூ.23.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் தமிழகம் முழுவதும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன.
இதில் கோவை மாவட்டத்தில் 599 பேர் முறைகேடாக இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றது பற்றி தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை வேளாண்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் 599 பேர் முறைகேடாக விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி பெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து இதில் 589 பேரிடமிருந்து ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கோவையை தவிர்த்து சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட மாவட்டங்களில் நிலம் இருந்து அவர்களுக்கு கோவையில் உள்ள வங்கி கணக்குகளில் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்திற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு 1,129 பேருக்கு பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் பணம் செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 540 பேரிடமிருந்து பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களிடம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.