பிரபல பாடகர் எஸ்.பி‌.பி மறைவையொட்டி கோவையில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் பாடல்கள் பாடி இசை அஞ்சலி!

கோவை: பிரபல பாடகர் எஸ்.பி‌.பி மறைவையொட்டி கோவையில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை: பிரபல பிரபல பாடகர் எஸ்.பி‌.பி மறைவையொட்டி கோவையில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி திரைப்பட பாடகரும், குணச்சித்திர நடிகருமான எஸ்‌.பி.பாலசுப்பிரமணியம் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடல் திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், அவருக்கு அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கோவையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மேடை இசை கலைஞர்கள், எஸ்.பி பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடிய பாடல்களை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...