கோவை: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (38), தனியார் நிறுவனத்தில், மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்தார். இவருக்கு திருமணமாகி 9 வயது ஆண் குழந்தை உள்ளது. மேலும் இவரது மனைவி பவித்ராதேவி 9 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு கதிர்வேல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும் பொழுது, ஊஞ்சவேலம்பட்டி அருகே நிலைதடுமாறி ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் பின்புறம் இருசக்கர வாகனத்துடன் மோதினார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கதிர்வேல் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.