கோவை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா (உன்னால் முடியும் தம்பி) என்பவர் மெழுகுவர்த்தியில் ஆயில் பெயிண்டிங் மூலம் எஸ்.பி.பியின் உருவத்தை வரைந்து அதில் இந்த வரிகளை பதிவிட்டு உள்ளார்.

கோவையை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, அவ்வப்போது பல்வேறு வகையிலான சிற்பங்கள் செய்வது வழக்கமாக கொண்டு உள்ளவர்.
சிறிய அளவிலான உலக கோப்பை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பது சுதந்திர தினத்தன்று காந்தி, திலகர், பகத்சிங், விவேகானந்தர், நேதாஜி, பாரதியார், நேரு, ஆசாத், ராஜாராம் மோகன், ஜாகீர் உசேன், அப்துல் கலாம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உருவங்களை மெழுகுவர்த்தியால் உருவாக்கி இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இதனை உருவாக்கிய யு.எம்.டி ராஜா கூறுகையில்,
உன்னால் முடியும் தம்பி தம்பி, உனக்குள் இருக்கும் உன்னை நம்பி என்ற பாடல்கள் மூலம் பல்வேறு இளைஞர்களின் திறமைகளை, தனது பாடல் வரிகள் மூலம் திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் என புகழாரம் சூட்டியவர், அதில் தானும் ஒருவன் என்றார்.
மேலும், அவர் மறைந்தாலும் அவரது குரல் ஓசை என்றும் எஸ்.பி.பியின் விருப்பப்பட்ட பாடல்களில் ஒன்றான டுயட் படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி எனும் பாடல் வரிகளை, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வடிவமைப்பு செய்துள்ளதாக கூறினார். மக்களை விட்டு நீங்காது என்றும் ஒளியாக இருப்பார் என்பதை உணர்த்தும் வகையில் மெழுகுவர்த்தியில் இதனை வடிவமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.