கோவை சிங்காநல்லூர் அருகே தடைசெய்யப்பட்ட 750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்தனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்தனர்.

கோவை நகரில் அண்மைக்காலமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோவை மாநகர காவல் ஆணையருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து, மாநகரில் எங்கெங்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில், சிங்காநல்லூர் SIHS காலனி பகுதியில் ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.



அப்போது, 18 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 750 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதனை கடைகளில் விற்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.



இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலராம், முல்லாராம் மற்றும் மகேந்திரா ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கோவை நகரில் இதுபோன்று வேறு எங்காவது வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டு, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...