திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ள வேளான் சட்ட திருத்த மசோதா விவசாயிகளின் நலனை பறிப்பதாக இருப்பதால் அதனை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் மற்றும் இடதுசாரி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விவசாயிகள் அனைவரையும் கைது செய்தனர்.