திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மின்தடை ஏற்பட்டதால் ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டதன் காரணமாக அடுத்தடுத்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவமனை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.