வேளாண்மை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல்!

கோவை: வேளாண்மை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: வேளாண்மை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 



இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, வேளாண்மை சட்டம் விவசாயிகளை ஒடுக்கும் வகையில் இருப்பதை சித்தரிக்கும் வகையில், விவசாயிகள் சட்டை அணியாமல் மண்வெட்டி ஏந்தியபடி இரும்பு சங்கிலியில் கட்டியபடி போராட்டம் நடத்தினர். 



இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏஐடியூசி,தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...