சென்னை: பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரானோ தொற்று காரணமாக கடந்த மாதம் ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் உள்ள எம் ஜி எம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை நேற்று மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை அளித்த நிலாயில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை முதலே சமூக வலைத்தளங்களில் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் என ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு பலரும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில், அவரது மரணம் அவரது கோடானு கோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.பி.பி. மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி மற்றும் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள்.