கோவையில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை: கோவையில் 50 முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் மற்றும் செவித்திறன் கருவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



கோவை: கோவையில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் மற்றும் செவித்திறன் கருவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிளை பயனாளிகளுக்கு வழங்கினார்.



மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் பேட்டரி மூலம் இயங்கும் 50 சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.



மேலும், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முதற்கட்டமாக பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலியையும், நான்கு பேருக்கு காது கேட்கும் கருவி, வாட்டர் பெட் பொருத்திய சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...