கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் ஒற்றை காட்டுயானை தாக்கி வாலிபர் பலி..!

கோவை: கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் ஒற்றை காட்டுயானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் ஒற்றை காட்டுயானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பெரிநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோபநாரி, காப்பு காட்டை ஒட்டியுள்ள மூணு குட்டை கிராமத்தில் காட்டு யானை தாக்கி கேரளாவை சார்ந்த ஞானபிரகாஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு ஞானபிரகாஷ் மற்றும் அவரது நண்பர் அருண்குமார் இருவரும் இருசக்கர வாகனத்தில், மூணு குட்டையில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தோட்ட வேலையை முடித்து கொண்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போது, அந்தப் பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் தாக்கப்பட்டு ஞானபிரகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உயிரிழந்த ஞானபிரகாஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காரமடை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...