கோவை: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 61ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், கோவையிலுள்ள சைமா வளாகத்தில் இன்று நடைபெற்றது.

பொதுக்குழுவை தொடர்ந்து நடைபெற்ற 2020-21 ஆம் ஆண்டுக்கான முதல் நிர்வாக குழு கூட்டத்தில் சைமாவின் தலைவராக கோவை, பிரீகாட் மெரிடியன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், அஸ்வின் சந்திரன் மீண்டும் ஒரு மனதாக, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அஸ்வின் சந்திரன், பருத்தி ஜவுளி ஏற்றுமதி கழகம் மற்றும் சிட்டி என்று அழைக்கப்படும் இந்திய ஜவுளி கூட்டமைப்புகளின் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். ஜவுளி தொழில்நுட்பத்தில் பி.எஸ்.சி. ஹானர்ஸ் மற்றும் அமெரிக்காவின் இல்லினோசிஸ் பல்கலைகழகத்தில் இருந்து எம்.பி.ஏ.முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
சைமாவின் துணைத் தலைவராக, கோவை, அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர், ரவி சாம் மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வணிகவியல் பட்டதாரியான, ரவி சாம், யுனிவர்சிட்டி ஆப் மான்செஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில் ஜவுளி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ பெற்றுள்ளார். கோவையில் உள்ள நீர் நிலைகளை காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்ட சிறுதுளி அமைப்பின் நிறுவன அறங்காவலராக, அவர் உள்ளார்.
மேலும், அவர் சி.ஐ.ஐ. என்றழைக்கப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக செயல்பட்டுள்ளார்.
மேலும், சைமாவின் உதவி துணைத் தலைவராக, திண்டுக்கல்லில் செயல்படும் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர்,
டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுந்தரராமன் மருத்துவம் படித்தவர். அவர், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் இருந்து எம்.பி.ஏ.முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டுள்ளார். தற்போது,இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் தலைவராக உள்ளார்.