கோவை: ஆண்டு தோறும் அக்டோபர் மாதம், ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு, 2560 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இந்தமுறை 90 நாட்களுக்கு முழுமையாக 2880 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மனுவை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயிகள் கொடுத்துள்ளனர்.
அம்மனுவில், கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2000 ம் ஆண்டு ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் நடைமுறைக்கு வந்த போது, WRO உயர்மட்டக்குழு பரிந்துரையின்படி
திருமூர்த்தி பாசன பாலாறு புதிய ஆயக்கட்டுக்கு ஒரு நாளுக்கு 85 Mcft நீர் என ஒரு சுற்றுக்கு 17 நாட்கள் வீதம் 1450 Mcft நீர் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது WRO உயர்மட்டக்குழு பரிந்துரைக்கு மாறாக ஒரு சுற்றுவை 21 நாட்கள் எனவும் ஒரு சுற்றுக்கு 1900 Mcft நீர் என கடந்த சில வருடங்களாக மாற்றியமைத்து அரசாணை பெற்று வருவதால், ஒட்டு மொத்த PAP திட்டத்திலும் நீர் பற்றாக்குறையால் குளறுபடி ஏற்படுகிறது.
அப்பற்றாக்குறை, நீரை சரி செய்ய எங்களின் பாசன நீரை கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைத்து ஈடு செய்து வருகிறார்கள். இதனால், இரு மாநில பங்கீடு மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக, தாங்கள் உண்மைநிலை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என்று அம்மணு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.