கூடலூர் அருகே மின் மயானம் பழுதடைந்துள்ளதால் இறந்த உடல்களை எரியூட்ட தற்காலிக செட் அமைத்துத் தர கோரிக்கை!

நீலகிரி: கூடலூர் அருகே மின் மயானம் பழுதடைந்துள்ளதால், இறந்த உடல்களை எரியூட்ட தற்காலிக செட் அமைத்துத் தர முன்னாள் கவுன்சிலர் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


நீலகிரி: கூடலூர் அருகே மின் மயானம் பழுதடைந்துள்ளதால், இறந்த உடல்களை எரியூட்ட தற்காலிக செட் அமைத்துத் தர முன்னாள் கவுன்சிலர் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காளம்புழா பகுதியில் உள்ள மயானத்தில், இறந்த உடல்களை எரிக்கும் மின் தகனமேடை உள்ளது. இந்த மின் தகனமேடை அடிக்கடி பழுதடைந்து விடுவதால், இறந்த உடல்களை அதன் அருகில் உள்ள வெளிப்பகுதியில் வைத்து தகனம் செய்வது வழக்கமாக உள்ளது.

இதனிடையே, மழை காலங்களில் இவ்வாறு உடல்களை எரியூட்டுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், இங்கு தற்காலிக செட் அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும், அதற்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், கூடலூர் நகரில் இறந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்கு, அவரது உறவினர்கள் காளம்புழா மயானத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், கடும் மழை காரணமாக உடலை எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, இறந்தவரின் உறவினர்கள் அங்கு தற்காலிகமாக தகர பந்தல் அமைத்து உடலை எரியூட்டி உள்ளனர். மழை மற்றும் காற்று காரணமாக தற்காலிக பந்தல் மீது போடப்பட்ட தகரங்கள் பறந்து விடும் என்பதால் உடல் எரியூட்டப்பட்டு முடியும் வரை அருகில் நின்று தகரங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இதுபோன்ற அசௌகரியங்களை போக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் தற்காலிக தகர செட் அமைத்து கொடுக்க வேண்டும் என நகராட்சியின் முன்னாள் 12வது வார்டு கவுன்சிலர் போஸ் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...