திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மின் மின் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிர்கள் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி அமைப்பிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு நேற்றைய தினம் மின்தடை ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஏற்கனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் மனு அளித்தும், இதுவரை சரி செய்யாத காரணத்தினால் தற்போது உயிர்பலி ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக தலைமை மருத்துவமனைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும், தினந்தோறும் கொரணா பரிசோதனை மேற்கொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், வட்டார அளவில் கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.