உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் பட்டபகலில் அமைச்சரின் உதவியாளரை கடத்திய மர்ம நபர்கள்..! போலீசார் விசாரணை

திருப்பூர்: உடுமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் உதவியாளரை உடுமலை சட்டமன்ற அலுவலக கட்டிடத்தில் பட்டபகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரின் உதவியாளரை உடுமலை சட்டமன்ற அலுவலக கட்டிடத்தில் பட்டபகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகவும் ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.



இவரது சொந்த உதவியாளராக இருந்துவருபவர் கர்ணன்.



இந்நிலையில், உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தபோது, காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் அமைச்சர் உதவியாளர் கர்ணனை அடித்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர், இது குறித்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் விசாரணை செய்து வருகிறார். அரசியல் காரணுங்களுகாகவா அல்லது சொந்த காரணத்திற்காக கடத்தப்பட்டாரா என் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே, உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளரை உடுமலையை அடுத்துள்ள தளி என்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...