மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை..! திரையரங்குகளில் தான் வெளிவரும் - லோகேஷ் கனகராஜ்

கோவை: மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை எனவும் அத்திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளிவரும் என திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை எனவும் அத்திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளிவரும் என திரைப்பட

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆசிர்வாத் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று

நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசுகையில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா நடித்த மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை

எனவும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளிவரும் எனவும் திரையரங்கு திறந்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்

என்று தெரிவித்தார்.

அதேபோல, மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்திருப்பதாக கூறிய அவர், கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ளவர் வாழ்வாதாரம்

பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், திரையரங்குகளை திறக்கப்படவில்லை எனில் பலரும் கஷ்டப்படுவார்கள் என கூறிய அவர், திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என நம்புவதாக கூறினார்.



மேலும், நடிகர் கமல்ஹாசன் உடனான திரைப்பட பணிகள் தற்போது தான் துவங்கியிருப்பதாகவும், மாஸ்டர் வெளியீட்டிற்கு பிறகு அப்படம் குறித்த அறிவிப்புகள் வருமெனவும்

அவர் தெரிவித்தார்.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...