கோவை: கோவையில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வைரஸ் தொற்று காலத்தில் உரிய சம்பளம் வழங்கவும், வேலை நீக்கம், ஊதிய குறைப்பு நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தியும், உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7,500 வீதம் தல 22 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர், தங்களது 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.