கோவைக்கு 33 நடமாடும் ரேசன் கடைகள் ஒதுக்கீடு

கோவை: கோவை மாவட்டத்துக்கு 33 நடமாடும் ரேசன் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்துக்கு 33 நடமாடும் ரேசன் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 3,501 நடமாடும் ரேசன் கடை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கடந்த திங்கள்கிழமை துவக்கி வைத்தார். இதில், கோவை மாவட்டத்துக்கு 33 ரேசன் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்:

கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட்டத்தில் 13, கிணத்துக்கடவு வட்டத்தில் 9, பொள்ளாச்சி வட்டத்தில் 5, அன்னூர் வட்டத்தில் 2, மேட்டுப்பாளையம், வால்பாறை, மதுக்கரை, உதவி பங்கீட்டு சரகம்1-ல் தலா 1 கடைகள் வீதம் மொத்தம் 33 நடமாடும் ரேசன் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நகரும் ரேசன் கடைகளின் கீழ் 3 ஆயிரத்து 703 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. மலைவாழ் குடியிருப்புகள், ரேசன் கடைகள் தூரமாகவுள்ள பகுதிகளுக்கு இந்த நடமாடும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

கோவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 33 நடமாடும் ரேசன் விலைக் கடைகளும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும், என்றார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...