கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பிழைகள் திருத்தம் செய்ய 22 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கோவை: கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் மேற்கொள்ளவும், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 22 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை: கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் மேற்கொள்ளவும், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 22 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: 

நாடு முழுவதும் ஒரே மாதிரி இலக்கங்கள் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை, இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, புதிய வாக்காளர் அட்டையில், 3 ஆங்கில எழுத்துக்களும், 7 இலக்க எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம், வாக்காளர் ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கோ, மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தாலும் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் மாறாது. அது போன்ற சூழ்நிலையில், அவர் தன் புதிதாக இடம்பெயர்ந்து உள்ள வீட்டின் முகவரி மட்டும் மாற்றினால் போதுமானது.

கோவை மாவட்டத்தில் பழைய சீரியல் வரிசை கொண்ட வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக, இந்த புதிய சீரியல் வரிசை கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக  மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட வில்லை. 

இருப்பினும், 18 வயது பூர்த்தி அடைந்தோர், வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கோரி ஆன்லைன் மூலம் தினமும் 500 பேர் முதல் 600 பேர் வரை விண்ணப்பித்து வருகின்றனர். இது தவிர, எழுத்துப் பிழை, முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். 

கடந்த மார்ச் மாதம் துவங்கி, தற்போது வரை 22 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கோரியும், பிழைகள் திருத்தம் செய்ய கோரியும் இதுவரை விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் மூலம், விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...