பொள்ளாச்சி விவசாயிகள் மகிழ்ச்சி; ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் அதிகரிப்பு
பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்றுநடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மணிவாசகம்கூறுகையில், "ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 314மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு, நேற்று கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில், அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர். முதல் தர கொப்பரை 173 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10610 -க்கும், அதிகபட்சம் ரூ. 11300 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 141 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9500 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 7510 -க்கும் விற்பனையானது. 10 வியாபாரிகள், 68 விவசாயிகள் ஏலத்தில்பங்கேற்றனர்."
"கடந்த வாரத்தை விட 63 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 150 குவிண்டால் ரூ. 13.50 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது", என்றார்.