திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் இருவர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்

திருப்பூர்: திருப்பூரில் ஆக்சிஜன் கிடைக்காமல் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் ஆக்சிஜன் கிடைக்காமல் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று 40 நிமிடம் ஏற்பட்ட மின்தடையால் ஆக்சிஜன் செலுத்துவது தடைப்பட்டு 2 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே மின்வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை நேர்ந்ததாக அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். மேலும், மின்தடை நேர்ந்தது உண்மை தான் என்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவமனை முதல்வர் வள்ளி தெரிவித்தார்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர் மின்தடையால் ஆக்சிஜன் செலுத்த முடியாமல் உயிரிழந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே நோயின் வீரியத்தால் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், நிர்வாக அலட்சியத்தால் இப்படி அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது.

இதற்குக் காரணமானவர்கள் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் இனி இத்தகைய சம்பவம் நிகழாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அனுப்பிட வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...