கோவையில் தென்மேற்கு பருவமழை: எதிர்பார்த்ததை விட அதிக மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன; இதுவரை 269 மி.மீ. மழை பதிவு

கோவை: இந்த ஆண்டு, கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும், என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது.


கோவை: இந்த ஆண்டு, கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும், என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது.

கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழையால் கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. உக்குளம், செங்குளம், பேரூர் பெரிய குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் முழுவதும் நிறைந்து உள்ளன.

தற்போது நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில்:

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும். ஆனால், இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு பெய்துள்ளது. இதில் ஜூன் மாதத்தில் 22.5 மி.மீ. மழையும், ஜூலை மாதத்தில் 83.5 மி.மீ. மழையும், ஆகஸ்ட் மாதத்தில் 49.5 மி.மீ. மழையும், இந்த மாதத்தில் தற்போது வரை 113.5 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிய இன்னும் சில நாட்கள் உள்ளதால், கூடுதலாக 40 மி. மீ. வரை மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மழையால், விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை தொடங்கலாம், என்றார்.

தொடர், தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்கள் 85 சதவீதம் அளவிற்கும், வெள்ளலூர் பெரியகுளம் 80 சதவீதம் அளவிற்கும் நிரம்பியுள்ளன. இந்த குளங்கள் முழு கொள்ளளவை விரைவில் எட்டும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...