கோவையில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 407 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க திட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பசுமை வீடு திட்டத்தில் 407 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பசுமை வீடு திட்டத்தில் 407 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசு சார்பில், பசுமை வீடு திட்டமும், மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில், வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10 லட்சமும், பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.1.80 லட்சமும் நிதி அளிக்கப்படுகிறது.

இதனிடையே, பசுமை வீடு திட்டத்தில், பழங்குடியினர்களுக்கு மட்டும் ரூ.2.10 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக நிதி நடப்பு நிதியாண்டில் உயரத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:

பசுமை வீடு திட்டத்தில் நடப்பு ஆண்டு பழங்குடியினர்களுக்கு மட்டும் திட்ட நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றப் பயனாளிகளுக்கு, அதே ரூ.2.10 லட்சம் நிதி வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் பசுமை வீடு திட்டத்தில் 687 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடியினர்களுக்கு 407, ஆதி திராவிடர்களுக்கு 70, மற்றவர்களுக்கு 210 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பயனாளிகள், பழங்குடியின நல வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற பயனாளிகள், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...