தமிழகத்தில் கால்நடை சந்தைகள் விரைவில் திறக்க முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - பொள்ளாச்சியில் கால்நடைத்துறை அமைச்சர்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.



மாக்கினாம்பாட்டி, கோலார்பட்டி, தென்குமாரபாலையம், சின்னாம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 65 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இதையடுத்து, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடையே பேசுகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கடந்த ஆண்டு 2,40,000 மகளிருக்கு தலா 25 நாட்டுக்கோழிகள், 15,000 மகளிருக்கு கறவை பசுக்கள், 1,50,000 மகளிருக்கு 6 லட்சம் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.



மேலும், தற்போது மூடப்பட்டுள்ள கால்நடை சந்தைகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி கால்நடை சந்தைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர், தமிழகத்தில் விடுபட்டுள்ள பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொடங்கியுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, நேற்றைய தினம் வரை 13 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.

மேலும், பி.டெக் உணவு தொழில்நுட்பம் பால்வள தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடத்திட்டத்தில் சேர 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...