கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு 800 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்ற இருவர் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, அரிசி மற்றும் காரை மகாலிங்க புரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி நந்தனார் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக வைத்திருந்த, சுமார் 800 கிலோ ரேஷன் அரிசியை கார் முலம் கேரளாவுக்கு சிலர் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி புதிய திட்ட சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட மகலிங்கபுரம் போலீசார் அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது, காருக்குள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த, இலவச அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

பின்னர், அங்கிருந்து தப்பி ஓட முயன்ற மாப்பிள்ளை கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த விஜயன் மற்றும் சாதிக் ஆகியோரை மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம், இருந்து கார் மற்றும் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்