கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கோவை: கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இருவரை கம்பத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இருவரை கம்பத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை அடுத்து பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா. இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களில் பின்னால் அமர்ந்து இருந்தவர், வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினத்தின் கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு தப்பி ஒட முயன்றுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வாகனத்தில் தப்பிக்க முயன்ற இளைஞர்களை பிடித்து கீழே தள்ளி, சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விசாரணையில் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப் மற்றும் ரத்துல் என்பது தெரியவந்தது. மேலும், இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...