கோவையில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை: கோவையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். அவரிடம் வருமானவரித்துறையினர் கடந்தாண்டு ஜீன் மாதம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

பின்னர், வீடு திரும்பிய பழனிசாமி காரமடை அருகேயுள்ள குளத்தில் சடலமாக கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக வழக்கு பதிவு செய்யக்கோரி வலியுறுத்தினர்.

இதனையடுத்து, பழனிச்சாமியின் உடற்கூறாய்வை, பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒரு மருத்துவரும், அரசு மருத்துவர்களும் இணைந்து செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் மருத்துவர், உடற்கூறாய்வு அறிக்கையை கொடுத்துவிட்டார். ஆனால், அரசு மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.



இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மூன்று மாதத்திற்குள் இவ்வழக்கை முடித்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டும், காலம் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி பழனிசாமி மனைவி, மகன் ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...