கோவை மற்றும் திருப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்பி கோரிக்கை!

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பி.ஆர். நடராஜன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பி.ஆர். நடராஜன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சமீப நாட்களாக கொரோனா கிருமித் தொற்று மிக அதிக அளவில் பரவி வருகிறது. கோவை மாவட்டமும், திருப்பூர் மாவட்டம் சிறு தொழில்கள் நிறைந்த நகரங்களாகும். தற்போது வெளியூர், வெளி மாநில தொழிலாளர்கள் திரும்ப வந்துள்ளனர். மேலும், கால நிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்திருப்பதால் பொது மக்கள் சளி, காய்ச்சல் அதிகரித்துள்ளது.

அதே சமயம், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில், சுகாதார வசதியைப் பராமரிப்பதில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்து வருகின்றன. அத்துடன் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது.

குறிப்பாக, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருத்தாலும், அங்கு போதிய மருத்துவர்கள், மருத்துவக் கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பிடம் உள்ளிட்ட நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் அவலமான நிலையில் உள்ளன.

மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மருத்துவப் பரிசோதனையை அதிகப்படுத்துவது மிகவும் முக்கியம் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2500 பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. 6000 பரிசோதனை செய்தால் ஓரளவுக்கு நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். நோயை கட்டுப்படுத்த முடியும்.

அதேபோல, தனியார் பரிசோதனை மையங்களில் சில மணி நேரங்களிலேயே மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அரசு மருத்துவ பரிசோதனை முடிவுகள் 2-3 நாட்கள் காலதாமதம் செய்யப்படுகிறது. இதன் விளைவால் பரிசோதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆகவே, கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறியப்படாத சூழலில் பக்க விளைவுகள் இல்லாத நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கும் சித்த, ஹோமியோ தடுப்பு மருந்துகள் தேவையான அளவுக்கு கிடைக்கவும், அனைத்து பகுதி மக்களுக்கும் இந்த தடுப்பு மருந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...